மஸ்கெலிய ரைட் அக்கரை தோட்டத் தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
தமக்கு வழமையாக வழங்கப்படும் முற்கொடுப்பனவு தொகையை விடவும் 1000 ரூபா மேலதிகமாக வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை வழங்க தோட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ரைட் அக்கரை தோட்டத்தின் 7 பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 1400 தோட்டத் தொழிலாளர்கள் இப்பணிப்புறக்கணிப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது இவ்வாறு இருக்க, தோட்டத் தொழிலாளர்களுக்கான பண்டிகை முற்கொடுப்பனவு 15,000 ரூபா வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிருத்திருந்த நிலையில் சில தோட்ட நிர்வாகங்கள் பத்தாயிரம் ரூபாவை மட்டுமே வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.