இனிவரும் காலங்களில் பொலிஸ் சேவையில் இணைக்கப்படும் பொலிஸாரில் 25 வீதம் தமிழ் பேசுவோராக இருப்பர் என்று சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டச் செயலகத்தில் குற்றச்செயல் மற்றும் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகள் இனிவரும் காலங்களில் இருக்கக்கூடாது என்று எச்சரித்த அமைச்சர், மண், மரம் கடத்தல் போன்ற சட்ட விரோத செயற்பாடுகள் முற்றாக தடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவோரில் 25 வீதமானவர்கள் தமிழ் பேசுவோராயிப்பர் என்றும் தெரிவித்தார்.
வேலைத்தளம்