ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் இரு நாட்களுக்குள் ஏற்படும் காலநிலை மாற்றத்தினால் மோட்டார் வாகன சாரதிகள் எச்சரிக்கையோடு செயற்படுமாறு அந்நாட்டு தேசிய வளிமண்டலவியல் மத்தியநிலையம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நாட்டில் நிலவும் மழைக் காலநிலை மற்றும் காற்றினால் மணல் மற்றும் தூசு மேலெழும்புவதனால் மோட்டார் வாகன சாரதிகளுக்கு பாதை தௌிவாக தெரிவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ள அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம், இதனால் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் எச்சரித்துள்ளது.
தண்ணீர் அதிகமாக சேரக்கூடிய பகுதிகளில் மக்கள் கூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கடல் அலைகள் மிக கடுமையாக எழக்கூடிய வாய்ப்பு அதிகம் என்பதனால் கரையோர பிரதேசங்களுக்கு செல்வதை முடிந்தளவு தவிர்த்துக்கொள்ளுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (2) வரை தொடரும். முகிழ் மறைத்த நிலையில் நாட்டின் ஒரு பகுதி காணப்படும். மத்திய சவுதி அரேபியாவைக் கடந்து ஐக்கிய அரபு இராச்சியத்தினூடாக குறித்த முகிழ்கள் செல்வதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. அராபிய வலைக்குடாவில் அலைகள் இன்று மாலை 8.00 மணிவரை 8 -10- அடிவரை உயர்வதான வாய்ப்புகள் காணப்படுகின்றன. எனவே அவதானத்துடன் செயற்படுமாறு ஐக்கிய அரபு இராச்சிய வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது