கட்டார் புலம்பெயர் தொழிலாளருக்கான காப்புறுதி நிதியம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பணியாளர் உதவி மற்றும் காப்புறுதி நிதியத்தை ஸ்தாபிக்க கட்டார் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அண்மையில் டிவான் வளாகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அந்நாட்டு பொதுப் பிரதிநிதிகள் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதுடன் அதற்கான புதிய சட்டதிட்டங்களை உருவாக்கவும் அனுமதி கிடைத்துள்ளது.

சுதந்திர சேவை அதிகாரத்துடன் அமைச்சரவையின் நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் ‘பணியாளர் உதவி மற்றும் காப்புறுதி நிதியத்தை’ ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் உருவாக்கப்படவுள்ளது.

புதிய நிதியத்தின் ஊடாக பணியாளர் பிரச்சினைகளை தீர்க்கும் குழுவின் சட்டதிட்டங்களுக்கமைய பணியாளர்களுக்கான கட்டணத்தை தொழில் வழங்குநர்களிடம் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் குறித்த நிதியத்தை பெற்று பணியாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க முடியும்.

இதுதவிர பணியாளர் உதவி மற்றும் காப்புறுதி நிதியத்திற்கு நிரந்தர நிதிவளத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் ஒரு வழி உருவாக்கப்பட்டு வருவதுடன் அதனூடாக புலம்பெயர் தொழிலாளர்கள் நன்மை பெறுவர் என்று கட்டார் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435