குவைத் வைத்தியசாலையில் ஆதரவின்றி இலங்கைப் பெண்கள்

சுகயீனம் காரணமாக குவைத் வைத்தியசாலையில் பல இலங்கைப் பெண்கள் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தொலைபேசியூடாக தெரிவித்தார் என்று லங்காதீப இணையதளம் செய்தி வௌியிட்டுள்ளது.

சுகயீனம் காரணமாக குவைத்தின் கசூர் நகரில் உள்ள சபா டீபி தெரன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தொழில் வழங்குநர் மீள பணியில் சேர்த்துக்கொள்ள மறுப்பு தெரிவித்தன் காரணமாக அதே வைத்தியசாலையில் கடந்த 10 மாதங்களாக தங்கியுள்ளனர். அவ்வைத்தியசாலையில் மேலும் பல இலங்கைப் பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வைத்திசாலையில் தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களை பார்வையிட ஒருவருமே வருவதில்லையென்றும் அப்பெண் லங்காதீப இணையதளத்திற்கு தெரிவித்துள்ளார்.

கிரியுல்ல, பொலன்னறுவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இரு பெண்களே பணியாற்றிய வீட்டிற்கு செல்ல முடியாமல் வைத்தியசாலையிலேயே தங்கியுள்ளனர். வீட்டுப் பணிப்பெண்களாக தொழில் புரிந்த அவ்விருவரையும் மீள அழைத்து செல்லுமாறு பணியாற்றிய வீடுகளுக்கு வைத்திசாலை நிர்வாகம் அறிவித்தபோதிலும் அழைத்து செல்ல ஒருவரும் முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வௌியிட்ட பெண் தெரிவிக்கையில், “கடந்த 11 மாதங்களாக நான் இவ்வைத்தியசாலையில் தங்கியுள்ளேன். இலங்கை தூதரகத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டபோதும் எவ்வித பதிலும் இல்லை. பல தடவைகள் கதைத்த பின்னர் இருவர் வந்தனர். தூக்கில் தொங்கப் போவதாக எச்சரித்த பின்னரே அவர்கள் வந்தனர். அவர்கள் இரு சலவைத்தூள் பைக்கற்றுகள். இரு சிறிய நூட்ல்ஸ் பைக்கற்றுகள், சிறு சவர்க்கார கட்டிகள், ஒரு சுகாதார நப்கீன் பைக்கற், வாசனைத் திரவியம் மற்றும் கைகழுவும் திரவ போத்தல் என்பவற்றை வழங்கி புகைப்படம் எடுத்துச் சென்றனர். அவை தொலைகாட்சியில் காட்டப்பட்டதாக இலங்கையர்கள் தெரிவித்தனர்.,

நான் வீடொன்றில் பணியாற்றினேன். அவர்கள் இவ்வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பார்க்கக்கூட வரவில்லை. இங்கு உணவு தருகிறார்கள். ஆனால் சவர்க்காரம், பற்பசை ஒன்றும் இல்லை. எம்மை பார்க்க யாரும் வருவதில்லை. எனக்கு கணவர் இல்லை. பிள்ளைகளின் செலவுக்கு பணம் அனுப்பக்கூட வசதியில்லை. இந்த 11 மாதங்கள் சம்பளம் இல்லை. நாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனது ஒப்பந்த காலம் கடந்த ஜூலை மாதம் நிறைவுற்றது என்று அவர் தெரிவித்தார்.

மற்றைய பெண்மணிக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் சேவையில் இணைந்த அவருடைய சேவைக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவுற்றுள்ளது. அவர் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இவ்வைத்தியசாலையில் தங்கியுள்ளார்.

“நாம் நாட்டுக்கு எந்த கெடுதலும் செய்யவில்லை. நாட்டுக்கு பணம் சம்பாதித்து கொடுத்தவர்கள் நாம். எம் குழந்தைகளை பார்க்க நாட்டுக்கு அழைத்து செல்லுங்கள் என்றுதான் நாம் கோருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435