இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் (27) கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நோயாளர்களில் 08 பேரின் மரணம் இடம்பெற்றிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்இ உறுதிசெய்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
01. கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 87 வயதான பெண் கடந்த 23 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட மாரடைப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
02. கொழும்பு 09 தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 54 வதான பெண் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையிலிருந்து கொவிட் 19 தொற்றக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு அந்த வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் புற்றுநோயுடன் அதியுயர் கொவிட் 19 நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
03. மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான பெண் கடந்த 25 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றக்குள்ளானதுடன் ஏற்பட்ட மாரடைப்பாகும்.
04. கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான ஆண் நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், 27ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நாற்பட்ட நுரையீரல் நோயுடன் கொவிட் 19 வைரசு நிலை அதிகரித்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
05. கொழும்பு 02 பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான ஆண், கடந்த 26 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட மாரடைப்பாகும்.
06. கொழும்பு 10 மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதான பெண், கடந்த 26ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட மாரடைப்பாகும்.
07. கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான ஆண், கடந்த 25ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நாள்பட்ட நுரையீரல் நோய் மற்றும் ஆஸ்துமா நோயுடன் கொவிட்19 தொற்று நிலைமை தீவிரமடைதமையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
08. கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இருந்த 70 வயதான ஆண், சிறைச்சாலை வைத்தியசாலையில் கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் அதியுயர் நீரிழிவு நோய் நிலைமை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.