துறைமுக பணியாளர்களின் போராட்டம் தொடர்பாக ஜனாதிபதியின் அதிரடி கருத்து

எவ்வித அடிப்படையுமின்றி துறைமுகத்தை அண்மித்து நெருக்கடியை உருவாக்குவதற்கு ஒரு தரப்பினர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவ்வாறானவர்களால் தம்மை பயமுறுத்த முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மஹியங்கனையில் நேற்று (01) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எவ்விதத் தடைகள் வந்தாலும் வறுமையை ஒழிப்பதற்கான பயணத்தை நிறுத்தப் போவதில்லை என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

நாட்டின் நன்மைகளை சிந்திக்கும் தலைவர் ஒருவர் அதிகாரத்திற்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதற்கு இடையூறு விளைவிப்பதே சூழ்ச்சி மற்றும் அடிப்படைவாத குழுக்களின் நோக்கம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435