நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் விமான விபத்தில் பலி

கொரோனா தொற்று காரணமாக டுபாயில் இருந்து தாய்நாட்டுக்கு திரும்ப விரும்பிய இந்திய புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வந்த விமானம் விபத்துக்குள்ளானதில் விமானிகள் உட்பட 17 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

டுபாபையில் இருந்து கோழிக்கோடுக்கு ஏர் இந்தியாவின் X1344 விமானம் நேற்று இரவு 7.41 மணியளவில் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவ இடத்தில் மழை பெய்து வருகிறது. இதுவரை 35 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் 100-க்கும் அதிகமானோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 174 பயணிகள் இருந்தனர் என்றும், 10 கைக்குழந்தைகள், 2 விமானிகள் மற்றும் 5 விமானப் பணியாளர்கள் இருந்தனர் என்றும் இந்திய விமான போக்குவரத்துத்துறை ஊடகப்பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் ராஜீவ் ஜெயின் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435