நாளாந்த அடிப்படை வேதனம் 1,281 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,281 ரூபா நாளாந்த அடிப்படை வேதனம் வழங்கப்பட வேண்டும் என ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் வேதனமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் இன்று ஜே.வி.பியினால் சபை ஒத்திவைப்பவேளை பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இந்தப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றியபோதே அவர் இந்த வேதன உயர்வு யோசனையை முன்வைத்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் வேதன உயர்வு கோரிக்கை நீதியானதாகும். அதைகோரி அவர்களாலும், அமைப்புகளாலும் நடத்தப்பட்டுவரும் போராட்டங்களும் நியாயமானவையாகும். எனவே, தோட்டத்தொழிலாளர்களின் கோரிக்கையை இலகுவில் நிராகரித்துவிடமுடியாது. அதை புறந்தள்ளிவிட்டு அரசியல் வாதிகளாலும் பயணிக்கமுடியாது.

தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்துள்ள தொழிலாளர்களாயினும், விவசாயத் திணைக்களத்துடன் இணைந்துள்ள தொழிலாளர்களாயினும் அவர்களுக்கு 32 அயிரத்து 40 ரூபாய் என்ற மாநாந்த அடிப்படை வேதனம் வழங்கப்படுகிறது.

இது அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரு தொழிலாளிக்கான மிகக்குறைந்த அடிப்படை வேதனமாகும்.

இந்தத் தொகையை 25 நாட்களால் வகுத்தால், நாளாந்தம் ஆயிரத்து 281 ரூபாய் அடிப்படை வேதனமாக வழங்கப்பட வேண்டும்.

அந்த தொகை வழங்கப்பட்டால் மாத்திமே ஒரு பெருந்தோட்டத் தொழிலாளியால் தமது வாழ்க்யை நடத்திச் செல்ல முடியும்.

ஆனால் தற்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு விலைக்கான கொடுப்பனவுடன் சேர்த்து 530 ரூபாய் என்ற மிகக்குறைந்த அடிப்படை வேதனமே வழங்கப்படுகிறது.

இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளர்.

அரசாங்கத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இந்த விடயத்தில் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.

இந்தநிலையிலேயே 1000 ரூபாய் அடிப்படை வேதனத்தை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

நேற்றும் கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இந்த விடயத்தை வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த போராட்டங்கள் நியாயமானவை.

எனவே, துண்டுத்துண்டாக வௌ;வேறு விடயங்களை சேர்க்காமல், அடிப்படை வேதனமாக குறைந்த பட்சம் 1000 ரூபாய் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

அதேநேரம், நிறுவனங்களுக்கு இலாபம் கிடைக்கவில்லை என்பதற்காக தொழிலாளர்களுக்கு வேதனத்தை அதிகரிக்க முடியாது என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது.

முதலில் தொழிலாளர்களுக்கான அடிப்படை வேதனத்தை தீர்மானித்து வழங்க வேண்டும்.

அதன்பின்னரே நிறுவனங்கள் லாபம் குறித்து பார்ப்பதுடன், லாபம் இருக்குமாக இருந்தால் மேலதிக கொடுப்பனவை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேநேரம் கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள், தொழிலாளர்களது நலனைக் கருத்திற் கொண்டு இடம்பெறவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படை வேதனம் வழங்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல கூறினார்.

எனினும் அரசாங்கம் ஏற்றுக் கொள்வதால் மட்டும் பயன் இல்லை என்றும், இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

இதேநேரம், கம்பனிகளுக்கு அடிபணியாது, அனைத்து மலையக அரசியல்வாதிகளும் தொழிலாளர்களின் பக்கம் நிற்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பாடசாலை நடவடிக்கைகள் என்ற பெயரில் பெற்றோர்களிடம் பணம் சேகரிப்பதை நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கல்வி அமைச்சரினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் செயற்பாடுகளுக்கு என தெரிவித்து, பணம் சேகரிப்பது தொடர்பில் அண்மையில் அமைச்சரிடம் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435