பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை சம்பளத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கையை புகையிரத திணைக்களம் மேற்கொள்ளவில்லை என்று திணைக்களத்தின் தரப்படுத்தப்பட்ட தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் அமைப்பாளர் ஜானக பெர்ணாண்டோ இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், கொடுப்பனவை சம்பளத்துடன் இணைக்க பாராளுமன்ற அனுமதி கிடைத்திருந்த போதிலும் இது வரை இணைக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
இதனை கவனத்திற் கொண்டு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திய அவர் பொருத்தமான தீர்வை பெற்றுக்கொடுக்காத பட்சத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வேலைத்தளம்/அத தெரண