பால்நிலை மற்றும் வயதிற்கமைய வகைப்படுத்தப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்களைத் திரட்டுவதற்கான தேசிய கொள்கையை வகுப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளளது.
இது தொடர்பில் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற இணையதளம் (Online) மூலமான மெய்நிகர் தொலைநிலை அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அந்த அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் குடிசன மதிப்பீடு மற்றும் ஆய்வுகள் மற்றும் சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்படும் ஒருசில ஆய்வுகளைத் தவிர பால்நிலை மற்றும் வயதிற்கமைய தகவல்களைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சிரமங்களால் கொள்கைகள் மற்றும் திட்டமிடல் செயன்முறைகளில் பிரச்சினைகள் எழுந்துள்ளன.
குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தித் துறையில் அரசாங்கம் வழங்கியுள்ள முன்னுரிமைகளை அடையாளம் காணல்இ அவற்றின் போக்குகளை விளங்கிக் கொள்ளல் மற்றும் அவற்றுக்குத் தீர்வுகளை வழங்கும் போது திட்டமிடல் மற்றும் மூலோபாயங்களை மேற்கொள்வதற்கு தகவல்கள் அவசியமாகும்.
அதற்கமையஇ அமைச்சுஇ திணைக்களங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள் தமது விடயப்பரப்புக்களின் கீழ் மெற்கொள்ளும் அனைத்து குடிசன மதிப்பீடுஇ ஆய்வுகள் மற்றும் கற்கைகள் மூலம் திரட்டப்படும் பால்நிலை மற்றும் வயதிற்கேற்ப திரட்டுவதைக் கட்டாயமாக்குவதற்கு கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.