பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவடுவதற்கு தொழிலாளர்களுக்கு உள்ள உரிமையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு பாகாப்புத்துறைசார் புதிய பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதுடன், அதன் ஊடாக ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச்சர்களால் கருத்து வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கு தொழிற்சங்கத் தரப்பினால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. தொழிற்சங்கங்களுக்கு உள்ள யாப்புக்கு அமைய செயற்பட வேண்டுமே தவிர, அரசியல் தேவைக்காக செயற்பட முடியாது என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், இது தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்டிருந்தபோதே தொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவ அதிகாரிகளை பயன்படுத்தும் எண்ணத்தில் ஜனாதிபதி இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவடுவதற்கு தொழிலாளர்களுக்கு உள்ள உரிமையை இல்லாதொழித்து, அவர்களை அச்சுறுத்த இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் எனக் குறிப்பிடுவது தவறாகும். அவ்வாறு நடைபெறாது என அமைச்சர் கூறியுள்ளார்.