இன்று நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 52% க்கும் அதிகமானோர் பெண்களாவர். மேலும், உழைக்கும் மக்களில் சுமார் 60% மானோர் என்பதுடன், 1.4 மில்லியன் அரச ஊழியர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாவர். சுருக்கமாக கூறுவதாயின், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் பெண் … நாட்டிற்கு செல்வத்தை உருவாக்கும் செல்வத்தின் ஆதாரம் பெண்….
இன்று இது போன்ற ஒரு நாட்டில் ஒரு பெண்ணின் நிலைமை என்ன? இந்த நாட்டில் அவளுக்கு நல்ல இடம் இருக்கிறதா? சமூகத்தில் நல்ல கௌரவத்திற்கு உட்படுத்தப்படுகின்றார்களா? பெண்கள் உண்மையில் பாதுகாப்பாக உள்ளார்களா? இவையே இன்று எம் முன்னாள் உள்ள கேள்விகள்?
விபச்சாரத்தில் ஈடுபடும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் அவமானம்… அந்த பெண்ணுடன் உடலுறவுகொள்ளும் ஆண், குளித்துவிட்டு வீட்டுக்கு வந்தபின் மிகவும் தூய்மையானவராகும் நாட்டில்,…. பெண்களைப் பற்றி என்ன சொல்வது?…. இது உண்மையில் பிரச்சினையானது.
அரசு, அரை அரச, தனியார் மற்றும் வேளாண்மை, மீன்பிடித்தல் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற அமைப்புசாரா துறைகளில் அதிகளவானோர் பெண்களாவர். அமைச்சகத்தின் செயலாளர் முதல் சுகாதாரத் தொழிலாளர்கள் பதவிகள் வரை பொது சேவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளது.
பல தசாப்தங்களாக, பெண்களின் பலத்தினால், பெண்களின் போராட்டத்தின் விளைவாகவும், இதுவரையில் பல்வேறு பிரதான பதவிகளை வகிப்பதற்கு பெண்களுக்கு முடியுமாகியுள்ளது.
நாங்கள் அதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைந்தாலும், பணியிடங்களில் நடக்கும் வாய்மொழி, உளவியல் மற்றும் மறைமுக துன்புறுத்தல்களால் … அரசு அலுவலகம் பெண்கள் கண்ணீர் வடிக்கும் இடமாக மாறியுள்ளது. அவற்றின் பல சான்றுகளையும் எடுத்துக்காட்டுகளையும் நாம் காண்கிறோம், கேட்கிறோம்.
இந்த நாட்டின் சமூக அமைப்பு ஆணாதிக்க மனப்பான்மை மற்றும் விதிகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதனால்தான் பிறப்பிலிருந்து ஒரு பெண் இரண்டாம் வகுப்பு என்று குறைத்து மதிப்பிட வேண்டும், ஆண்கள் சொல்வது சரிதான், அவர்கள் முதலாளி, அவர்கள் தான் முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற எண்ணப்பாடு காரணமாக பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிறுவனத்தின் தலைவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது, கடுமையான வார்த்தைகளுக்கு முகங்கொடுப்பது, அவர்கள் அணியும் உடைகள் மீது ஏளனம் செய்வது, அவர்களின் அடிப்படை பெண் தேவைகளை அனுமதிக்காதது, உடல்நலம் மற்றும் பிற பொது மனிதாபிமான விஷயங்களில் நெகிழ்வு இல்லாதது போன்ற கடுமையான அடக்குமுறை நிலைமைகளுடன் பெரும்பாலானவர்கள் வேலை செய்கிறார்கள்.
உண்மையாக பெண், சில நேரங்களில் உங்கள் தாய், சகோதரி, மகள் மற்றும் மனைவி என பாத்திரம் வகிக்கிறார். பிறப்பு முதல் இறப்பு வரை இந்த மாறுபட்ட பாத்திரங்களில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். அவளுடைய சகிப்புத்தன்மை, பொறுமை, திறன் மற்றும் வலிமை ஆகியவற்றைப் பொறுத்து இந்த உலகின் இருப்பு உள்ளது.
எனவே, பெண்கள் சமூகத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பணியிடங்கள் பொருத்தமான சூழலாகவும், எந்தவிதமான துன்புறுத்தல்களுக்கும் உட்படாத இடமாகவும் இருக்க வேண்டும். தனித்தனியாக, பெண்களாகிய நாங்கள் எங்கள் குரல்களை எழுப்ப வேண்டும், அவ்வாறு செய்யஇ பெண்கள் ஒரு வலுவான சட்ட தளத்தை கொண்டிருக்க வேண்டும்.
ஆகவே, C190 பிரகடனத்தை (தொழிலாளர் வன்முறை மற்றும் வன்முறையை ஒழிப்பதற்கான மாநாடு ஜெனீவா 21 ஜூன் 2019 ஜெனீவா சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் 108 வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது) அமுல்படுத்த நாங்கள் ஒட்டுமொத்தமாக அணிதிரள வேண்டும். உங்கள் தாய், மனைவி, சகோதரி, மகள் மற்றும் சிறந்த நண்பருக்ககா நீங்கள எடுக்கும் ஒரு சிறந்த முயற்சியாக ஆக்குங்கள்.
தமரா தயானி ஹெட்டிமுல்லகே – தேசிய அமைப்பாளர் – தேசிய தொழிற்சங்க முன்னணி