பொகவந்தலாவை நகரில் போராட்டம் தொடர்பான தெளிவூட்டல் மேற்கொண்டிருந்த 1000 ரூபா இயக்கத்தின் அங்கத்தவர்களுக்கு சிலரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
அதே வேளை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உட்பட 15 பேரினுடைய தேசிய அடையாள அட்டைகள் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டதோடு ஒரு மணி நேரத்திற்கு கிட்டிய கால அளவு பொலிஸ் நிலையத்தில் தரித்திருக்கவும் நேரிட்டது. 24ம் திகதி ஏற்பாடாகியிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்ற தடை ஆணையும் பெறப்பட்டிருந்தது.
1000 ரூபா இயக்கத்தின் போராட்டத்தை அடக்குவதற்காக அரசு முன்னெடுத்து செல்லும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 1000 ரூபா இயக்கம் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பு….
இவ் ஊடக சந்திப்பில் அரசு முன்னெடுக்கும் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான ஆர்ப்பாட்டம் நாளை (25)ம் திகதி 4 மணிக்கு கொழும்பு கோட்டை அரச மரத்திற்கு அருகில் இடம்பெறும் என 1000 ரூபா இயக்கம் தெரிவித்தது.