வட மத்திய மாகாண சுகாதார சேவை சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் ஏற்பட்டுள்ள பல்வேறு குளறுபடிகள் உட்பட பல்வேறு கோரிக்கைள் முன்வைத்து நேற்று காலை (21) பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்த வட மத்திய மாகாண அம்பியுலன்ஸ் சாரதிகள் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி மாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
இதேவேளை, அவசர சூழ்நிலையில் பயன்படுத்தப்படுத்துவதற்காக நோயாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று வடமத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித்த பண்டார தெரிவித்தார்.
இதேவேளை, ஏனைய மாகாணசபைகளுடன் ஒப்பிடுகையில் வட மத்தியமாகாண சபையில் ஊழியர்கள் இணைப்பது தொடர்பில் முறையான கொள்கை காணப்படவில்லை என்று மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் சாரதிகள் சங்க தலைவர் வசந்த குமார சுட்டிக்காட்டியுள்ளார்.