பாதுகாப்பற்ற நிலையில் குடும்பநல சுகாதார சேவை ஊழியர்கள்

வீடுகளில் உள்ள கர்ப்பிணிப் பெண்களின் அருகிலேயே சென்று பணியாற்றுபவர்கள் தான் குடும்பநல சுகாதார சேவை ஊழியர்கள்.

தற்போதைய கொரோனா அச்ச நிலைமைகளுக்கு மத்தியில் குடும்பநல சுகாதார சேவை ஊழியர்களுக்கு முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் கிருமித் தொற்று நீக்கி என்பன போதியளவு கிடைக்கவில்லை என அரச குடும்பநல சுகாதார சேவை ஊழியர்கள் சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு கூறியாக திவயின பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போதைய கொரோனா அச்ச நிலைக்கு மத்தியில் கொழும்பு மாநகர சபை எல்லை உட்பட ஏனைய பகுதிகளில் கடமையில் ஈடுபட்டுள்ள 10,000 கும் அதிகமான குடும்பநல சுகாதார சேவை ஊழியர்கள் உயிர் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்தத் துறையில் 7000 குடும்பநல சுகாதார சேவை ஊழியர்கள் உள்ளதுடன், மருத்துவமனையில் 3000 ஊழியர்கள் உள்ளனர்.

வீடுகளில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு எமது ஊழியர்கள் திரிபோசா வழங்குவதுடன், விட்டமின்களையும் பகிர்ந்து அளிக்கின்றனர். அத்துடன், வீடுகளில் உள்ள கர்ப்பிணிப் பெண்களை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு அவர்களின் வீடுகளுக்கு உள்ளேயே செல்கின்றனர்.

எனவே எவ்வளவு அபாயமானது நிலைமைக்கு மத்தியில் குடும்பநல சுகாதார சேவை ஊழியர்கள் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. எங்களது தேவைப்பாடு குறித்து சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. என்னும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435