வதிவிட அனுமதி, வீசா காலாவதியானவர்களுக்கு மேலும் ஒரு மாதம் – UAE

ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசாக்கள், வதிவிட அனுமதி என்பவற்றுக்கான காலக்கெடு முடிவடைந்தவர்களுக்கு மேலும் ஒரு மாதம் காலக்கெடு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் விமானங்கள் ரத்தாகி ஐக்கிய அரபு அமீரகத்தில் மாட்டிக்கொண்ட வெளிநாட்டவர்களுக்கு உதவும் வகையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது அந்நாட்டின் ஃபெடரல் ஒத்தோரிட்டி ஃபார் ஐடன்டிட்டி அன்ட் சிட்டிசன்ஷிப் (ICA).

கொரோனா வைரஸ் பிரச்சனை தொடங்கிய நாளில் இருந்து அந்நாட்டில் மாட்டிக்கொண்ட வெளிநாட்டவர்களின் காலாவதியாகும் விசா மற்றும் தங்குமிட அனுமதிக்கான காலக்கெடுவை நீட்டித்து வருகிறது அந்நாடு.

இதன் மூலம் காலக்கெடு முடிவடைந்த விசா, பர்மிட் வைத்திருப்பவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் கூடுதல் காலத்துக்கு அபராதத் தொகை ஏதும் செலுத்தத் தேவையில்லை.

இதன்படி சமீபத்திய கால நீட்டிப்பு நேற்று ஓகஸ்ட் 10-ம் திகதியுடன் முடிவடையும் நிலையில், நேற்றே இந்தக் காலக்கெடுவை மேலும் ஒரு மாதம் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது ஐ.சி.ஏ. இந்த ஒரு மாத கால நீட்டிப்பு ஓகஸ்ட் 11ம் திகதி முதல் அமுலுக்கு வரும். இதில் இருந்து ஒரு மாத காலத்தில் நாட்டில் இருந்து வெளியேறும், காலாவதியான விசா, பர்மிட் உடையவர்களுக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435