வரவு-செலவுத் திட்டத்திலும் ஏமாற்றப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்கள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறை வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுதியளித்திருந்த நிலையில், அது குறித்து வரவு-செலவுத் திட்டத்தில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

நேற்று வரவு-செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றில் நிகழ்த்தியிருந்த நிதி அமைச்சர், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

எனினும், 50 ரூபா மேலதிக கொடுப்பனவ தொடர்பில் அவர் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிட்டிருக்கவில்லை.

இது தமக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

1000 நாளாந்த அடிப்படை வேதனம் கூட்டு ஒப்பந்தம் ஊடாக பெற்றுக்கொடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் உறுதியளித்திருந்தபோதும், 750 ரூபா நாளாந்த அடிப்படை வேதனத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அலரி மாளிகையில் வைத்து கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருந்தனர்.

இதையடுத்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க வரவு-செலவுத் திட்டம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் வாக்குறுதியளித்திருந்தனர்.

எனினும், அவர்கள் வாக்குறுதியளித்ததைப் போன்று நிதி அமைச்சரின் வரவு – செலவுத் திட்ட அறிவிப்பில் 50 ரூபா மேலதிக கொடுப்பனவு தொடர்பில் எவ்வித அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435