அடிப்படை சம்பளம் மேலும் அதிகரிக்கப்படுமா?

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச தேசிய ஊதியமான 2,500 ரூபாவில் அதிகரித்து தற்போது 12,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதற்கு தொழிற்சங்கங்கள் திருப்திபடாது காலத்திற்கேற்றாற்போல் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு அழுத்தம் தெரிவிப்பது தொழிற்சங்கங்களின் கடமை என்று National Union of Seafarers Sri Lanka  (NUSS) தலைவர் பாலித்த அத்துகோரல கருத்து வௌியிட்டுள்ளார்.

நாம் நீண்டகாலமாக தேசிய அடிப்படை சம்பள அதிகரிப்புக்காக அனைத்து அரசாங்கத்துடனும் போராடி வருகிறோம். அரசாங்க வரவு செலவு நிவாரண கொடுப்பனவுடன் (3,500.00 ரூபா) சேர்த்து ஆகக்குறைந்த மாதாந்த அடிப்படைச் சம்பளம் 16,000 ரூபாவாகும். இது போதாது. காலத்திற்கு ஏற்ப ஆராய்ந்து பார்த்து சம்பள மாற்றம் மேற்கொள்ளப்படுவது அவசியம்.

தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை முதலாளிகள் சம்மேளன அதிகாரிகள் இதற்கு உடனடியாக பதிலளிக்க இவ்விடத்தில் இல்லை.

“அரசதுறை, ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் பாதுகாப்புப்படையினர் என தற்போது அனைத்து துறைகளுக்கும் சம்பளம் அதிகரிப்பு வழங்கப்படுகிறது, ஆனால் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதில்லை”. தொழிற்சங்கங்கள் மூன்று முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களுடன் (UNP, SLPP மற்றும் JVP) பேச முன்வரவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்கள் தனியார் துறைக்கு ஊதிய உயர்வை அமல்படுத்துவார்கள் என்ற வாக்குறுதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தொழிற்சங்கங்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகக்குறைந்த தேசிய அடிப்படை சம்பளமாக 25,000 ரூபா வழங்கப்படவேண்டும் என்று இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தேசிய சம்பள நிர்ணயச்சபையிடம் நாம் வலியுறுதினோம். அதன் அடிப்படையிலேயே அரசாங்கம் 10,000 ரூபாவாக இருந்த அடிப்படை சம்பள அளவுடன் மேலும் 2,500 ரூபாவை சேர்நத்து 12,500 ரூபாவாக அதிகரித்துள்ளது என்று சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கத்தின் (FTZ & GSEU) பொதுச் செயலாளர் அன்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார்.

, நான்கு நபர்களைக் கொண்ட ஒரு நாளாந்த வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாதாந்தம் சுமார் 55,000 ரூபாவரை தேவைப்படுகிறது என இலங்கை தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் கணித்துள்ள நிலையில், அரசாங்கம் அதிகரித்துள்ள 12,500 ரூபா சம்பளம் எவ்வாறு போதுமாகும்?

“அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை ரூ .50 ஆக அதிகரிக்க அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 10,000 ரூ. 2,500 வரை ரூ .12,500 வரை மற்றும் தேசிய குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ. 400 முதல் ரூ .100 வரை ரூ .500 வரை ”என்று அமைச்சரவை அலுவலகத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 24 அன்று எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவின்படி, தேசிய குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ .10,000 (ரூ .400 × 25) மற்றும் தேசிய குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ. 400 (ரூ .50 × 8) ஜனவரி 1, 2016 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Sunday Times

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435