ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்காவிடின் போராட்டம்

ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியர் சேவை தரம் 3 -11இற்கு இணைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்ட போதிலும் மலைய பாடசாலை ஆசிரியர் உதவியாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கல்வியமைச்சு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க தவறும் பட்சத்தில் ஆசிரிய உதவியாளர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.

ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவை தரம் 3 – 11 இணைத்துக்கொள்வதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை பெறுவதற்கு கடந்த பெப்ரவரி மாதம் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் பத்திமொன்றை சமர்ப்பித்தார். அப்பத்திரத்திற்கான அங்கீகாரம் கடந்த மே மாதம் வழங்கப்பட்டது. அதற்கமைய பௌத்த பாடசாலைகளில் ஆசிரிய உதவியாளர்களாக இருந்தவர்கள் மட்டுமே ஆசிரியர் சேவை தரம் 3 – 11 இற்கு உள்வாங்கப்பட்டனர். தோட்டப் பாடசாலைகளில் நியமிக்கப்பட்ட சுமார் 4000 ஆசிரியர் உதவியாளர்கள் இச்சேவைக்குள் உள்வாங்கப்படவில்லை. இது பெரும் அநீதியான செயல். மலைய ஆசிரிய உதவியாளர்களும் இச்சேவையினுல் உள்வாங்கப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435