அடுத்த ஆண்டு அரச ஊழியர்களின் சம்பளம்15 வீதம் அதிகரிப்பு

அனைத்து அரசாங்க ஊழியர்களினதும் அடிப்படை சம்பளம் எதிர்வரும் ஜனவரி முதல் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என அமைச்சர் வஜிரஅபேவர்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் (14) நேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2015 இல் அதிகரிக்கப்பட்ட பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்த சம்பள உயர்வு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் வழங்கிய உத்தரவாதத்தின் கீழ் 2020 வரை அரசாங்க ஊழியரின் அடப்படை சம்பளத்தில் அதிகரிப்பு செய்யப்படுமென்றும், இதற்காக வருடாந்தம் 12 பில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அரச துறையில் குறைந்த சம்பளம் பெறும் அலுவலக உதவியாளரின் அடிப்படைச் சம்பளம் 3,075 ரூபாவினாலும் கூடுதல் அடிப்படை சம்பளம் பெறும் சட்டமா அதிபரின் அடிப்படை சம்பளம் 14 ஆயிரம் ரூபாவினாலும் அதிகரிப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பள உயர்வு குறித்து அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

அலுவலக உதவியாளரின் அடிப்படை சம்பளம் 2015 ஆம் ஆண்டில் 14 ஆயிரம் ரூபாவாக இருந்தது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 2016 இல் அது 17,450 ரூபாவாக உயர்த்தப்பட்டது.

2017 இல் இது 20,525 ரூபாவாக , அதிகரிக்கப்பட்டது.

2018 ஜனவரியாகும் போது அலுவலக உதவியாளரின் அடிப்படை சம்பளம் 23.600 ரூபாவாக அதிகரிக்கப்படும். இது 15 வீத உயர்வாகும். இதன் படி அடுத்த வருடத்தில் 3,075 ரூபா அடிப்படை சம்பளத்தில் அதிகரிக்கப்படுகிறது.

2015 இல் நிபுணத்துவ மருத்துவரின் அடிப்படை சம்பளம் 42 ஆயிரமாக இருந்த நிலையில், 2016 இல் அது 51,512 ஆகவும் 2017 இல் 60,634 ஆகவும் உயர்த்தப்பட்டது. 2018 ஜனவரியில் இவர்களின் அடிப்படைச் சம்பளம் 69,750 ரூபாவாக 9.122 ரூபாவால் அதிகரிக்கிறது.

அலுவலக சிற்றூழியரின் மேலதிக நேர கொடுப்பனவு மணித்தியாலத்திற்கு 50 ரூபாகவாக இருந்ததுடன், தற்போது 94 ரூபா வரை உயர்கிறது.

அரச துறையில் சட்டமா அதிபரே கூடுதல் அடிப்படை சம்பளத்தை பெறுகிறார். 2015 இல் இது 67,000 ஆயிரம் ரூபாவாகவும் 2016 இல் அது 81,000 ரூபாவாகவும் இருந்தது. 2017 இல் 95 ஆயிரம் ரூபாவாக அவரின் அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட்டது. அடுத்த வருடம் ஜனவரி முதல் இது ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கிறது. இது15 வீத அதிகரிப்பாகும்.

இந்த அடிப்படை சம்பள அதிகரிப்பை சீர் செய்ய வரவு செலவுத்திட்டதில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்பிற்காக வருடாந்தம் 12 பில்லியன் ரூபா அவசியமாகிறது. 2020 வரை அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் பலப்படுத்தப்படும்.

இந்த நிலையில் அரச துறையில் தன்னார்வ ஓய்வூத் திட்டம் கொண்டு வரப்பட்டாலும் எவரும் விலக மாட்டார்கள். இதன்மூலம் ஓய்வூதியம், மேலதிக நேரக் கொடுப்பனவு,கடன்பெறும் வரையறை என்பன அதிகரிக்குமென்றும் அமைச்சர் வஜிர அபேவர்தன விளக்கமளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435