விமானிகளிடம் எப்போதாவது நடத்தப்படும் போதை பொருள் பாவனை பரிசோதனையை தொடர்ச்சியாக நடத்துமாறு ஶ்ரீ லங்கா எயார் லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணிகளின் நன்மை கருதி மேற்படி பரிசோதனையை தொடர்ச்சியாக நடத்துமாறு ஶ்ரீலங்கா எயார் லைன்ஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு உயர்ந்த சேவையையும் பாதுகாப்பையும் வழங்குவதில் ஶ்ரீ லங்கா எயார் லைன்ஸ் எப்போதுமே பின்னிற்பதில்லை என்று அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை சிவில் விமானசேவை அதிகாரசபையின் உத்தரவுக்கமைய விமானி மற்றும் விமான பணியாளர்கள் அனைவரிடமும் போதை பொருள் பாவனை பரிசோதனை நடத்துவது கட்டாயமாக்கபட்டுள்ளது.
கடமை நேரத்தில் இப்பரிசோதனையை புறக்கணிப்பது விமான சேவை சட்டதிட்டங்களை மீறும் செயலாக கருதப்படுவதுடன் நன்னடத்தை தொடர்பான பிரச்சினையாகவும் கருதப்படும் என்றும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
வேலைத்தளம்