அதிகரித்து வரும் சட்டவிரோத புலம்பெயர்வும் ஆட்கடத்தல் நடவடிக்கையும்

சட்டவிரோத புலம்பெயர்வு மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதை அவதானிக்கக்கூடியதாக இருப்பதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சட்டவிரோத புலப்பெயர்வு மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைள் கடந்த சில வருடங்களாக மீண்டும் அதிகரித்து வருவதை காணக்கூடியதாகவுள்ளது. கடந்த 30ம் தகிதி திருகோணமலை பிரசேத்தில் 4 ​பேர் சட்டத்தின் முன் நிறுத்தினோம். சட்டவிரோதமாக 45 பேர் வரை வௌிநாடொன்றுக்கு செல்ல முயற்சி செய்தமை இவர்களினூடாக அறிய முடிந்தது.

கடந்த 10 வருடங்களில் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வௌிநாடு செல்ல முயன்ற 4765 பேர் கைது செய்யப்பட்டதுடன் 103 படகுகளும் கைப்பற்றப்பட்டன. இந்த ஆண்டு கரையோரப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோத குடிப்பெயர்வில் ஈடுபட்ட 164 பேர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435