நாட்டில் உள்ள சுமார் 274 தேசிய பாடசாலைகள் அதிபரின்றி இயங்குவதாக கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுமார் 383 தேசிய பாடசாலைகள் உள்ளன. அவற்றில் 274 பாடசாலைகள் அதிபரின்றி இயங்குகின்றன. முதற்தர தேசிய பாடசாலைகள் 64 நாட்டில் இருந்தாலும் அவற்றில் 40 பாடசாலைகள் அதிபரின்றி இயங்குகின்றன.
இவ்வெற்றிடங்கள் சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக நிலவுகின்றன. இதனால் பாடசாலை நிர்வாக விடயங்களில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. சில பாடசாலைகளில் கடந்த இரண்டரை வருடங்களாக அதிபர்கள் நியமிக்கப்படவில்லை.
தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களில் 50 வீதமானவை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.