அதிபர்களின் சேவைக்காலத்தை 8 வருடங்களாக குறைக்க தீர்மானம்

தேசிய பாடசாலைகளில் சேவையாற்றும் அதிபர்களின் சேவைக்காலத்தை 8 வருடங்களாக குறைக்க கல்விச் சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதுவரையில் குறித்த கால எல்லை 10 ஆண்டுகளாக இருந்த நிலையில், அதனை 8 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், கல்வி நிர்வாக சேவையின் ஏனைய அனைத்து அதிகாரிகளும் 6 வருடங்களுக்கு மாத்திரமே ஒரு இடத்தில் சேவையாற்ற முடியும் என்ற கொள்கைக்கு அடுத்தவாரம் அனுமதி பெறப்பட உள்ளதாக கல்விச் சேவைகள் குழு தெரிவித்துள்ளது.

அவர்களின் சேவைக்காலம் தொடர்பில் இதுவரை தெளிவான கொள்கை தயாரிக்கப்பட்டிருக்கவில்லை என கல்விச் சேவைகள் குழு சுட்டிப்பதாட்டியுள்ளது.

இதேநேரம், கல்வி நிர்வாக சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும், தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்காக மட்டுமல்லாது கல்விச் சேவையின் அந்த தரத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், இடமாற்றம் வழங்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.

இது குறித்து கல்விச் சேவைகள் குழு கலந்துரையாடல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, 250இற்கும் அதிகமான பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாகவும் கல்வி சேவைகள் குழு குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435