அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி தற்காலிக இடைநிறுத்தம்

கல்வியமைச்சினால் முன்னெடுக்கப்படும் அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குருணாகல் – வாரியபொலவில் உள்ள வயம்ப பயிற்சி முகாமில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற பயிற்சிப் பட்டறையொன்றின்போது இடம்பெற்ற விபத்தில் பெண் அதிபர் ஒருவர் உயிரிழந்தார்.

ஹம்பாந்தோட்டை சுவீ தேசிய பாடசாலையின் அதிபரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவராவார்.

கயிற்றில் தொங்கி செய்யப்படும் ஒரு பயிற்சியில் ஈடுபட்டபோது குறித்த அதிபரின் கைவிடுப்பட்டதினால் அனர்த்தம் நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்த நிலையில், குறித்த அதிபரின் மரணம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள் நிறைவடையும் வரை அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சித் திட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்துவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் மரணம் தொடர்பில் அமைச்சு மட்ட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435