அதிபர்கள் இல்லாமல் நாட்டில் 265 தேசிய பாடசாலைகள்

இலங்கையில் உள்ள 353 தேசிய பாடசாலைகளில் சுமார் 265 பாடசாலைகளில் அதிபர்கள் இல்லாத நிலையில், பதில் அதிபர்கள் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அதன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அதிபர்களை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தேசிய பாடசாலையில் வெற்றிடமொன்று ஏற்படுமாயின் அதனை உடனடியாக வர்த்தமானியில் அறிவித்து, முறையான நியமனத்தை வழங்க வேண்டும்.

ஆனால், தற்போது தேசிய பாடசாலையில் வெற்றிடமொன்று ஏற்படுமாயின், பாடசாலையுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் அல்லது அரசியல் தரப்பினரால் தற்காலிக அதிபர் ஒருவர் நியமிக்கப்படுவதாக ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், நிலையான அதிபர் நியமனம் இல்லாதமையினால் தேசிய பாடசாலைகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானியை ஒரு மாதத்துக்குள் வெளியிடுவதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், அந்த வர்த்தமானி அறிவித்தல் தற்போதுவரை வெளியிடப்படவில்லை.

வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதை கல்வி அமைச்சர் தொடர்ந்தும் தாமதப்படுத்தி வருகின்றார் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில், உடனடியாக விண்ணப்பங்களைக் கோரி பாடசாலைகளுக்கான நிலையான அதிபர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435