அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினைகள் தொடர்பில் நிதியமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இப்பிரச்சினைக்கு எதிர்காலத்தில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் கல்வியமைச்சர் சட்டத்தரணி அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றில் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதிபர், ஆசிரியர் சம்பள பிரச்சினைபி.ஸி பெரேரா சம்பள அறிக்கையுடன் ஆரம்பித்துள்ள பிரச்சினை என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் சம்பளமானது ஏனைய சேவைகளுடன் தொடர்புபட்ட பிரச்சினை என்றபடியால் கல்வியமைச்சு தனியாக செயற்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிபர், ஆசிரியர்களின் சம்பளம் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதிபரின் சம்பளம் மாத்திரம் நூற்றுக்கு 106 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் அவர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் மிக விரைவில் தீர்த்து வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
வழிமூலம்- அத / வேலைத்தளம்