சீரற்ற காலநிலையால் தேயிலை உற்பத்தி பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேயிலை உற்பத்தி மற்றும் வாரந்த ஏலவிற்பனை பாதிப்படைந்துள்ளதாக தேயிலை உற்பத்தி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமை மற்றும் களுத்துறை, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை போன்ற நிலமைகளினால் தேயிலை விற்பனை மந்தமான நிலையில் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேநேரம், தேயிலை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் மாவட்டங்களில் தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களின் வருகை குறைந்துள்ளமையும் இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை ஒக்டோபர் முதல் வாரம் வரை இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக மேல் மற்றும் நுவரெலியா பிராந்தியங்களில் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, இந்தவார தேயிலை ஏலவிற்பனையில் மொத்தமாக 66 லட்சத்து ஐந்தாயிரத்து 23 கிலோ கிராம் தேயிலை விற்பனையாகியுள்ளதாக தேயிலை தரகு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியா, குவைட், சிரியா, ஜோர்தான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இந்த காலப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே தேயிலையை இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435