அதிபர் சேவை தரம் – 3 இற்கான ஆட்சேர்ப்பில் முறைகேடு: ஆராய்கிறது கல்வி அமைச்சு

கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அதிபர் சேவை தரம் – 3 இற்கான ஆட்சேர்ப்பின்போது முறைகேடு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பில் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் கவனத்திற்கு நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார்.

குறித்த ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டவர்கள் மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சில் வைத்து அமைச்சரிடம் இதுகுறித்து முறையிட்டனர்.

இதன்போது, நாடளாவிய ரீதியில் சுமார் 610 தமிழ்மொழி மூல வெற்றிடங்கள் இருக்கின்ற நிலையில், 167 பேர் மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ளதாவும் மொழிவாரியாக ஆட்சேர்ப்பு இடம்பெற வேண்டும் என்ற ஆட்சேர்ப்பு நியமங்களுக்கு மாறாக ஆட்சேர்ப்பு இடம்பெற்றமையினால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கடந்த ஆட்சியில் இருந்தவர்களிடமும் கடந்த ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களிடமும் இதுதொடர்பாக முறையிட தாங்கள் முயற்சித்தபோதும் தங்களுடைய கோரிக்கையை அவர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், உடனடியாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அந்த விடயத்தை கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார்.

இதன்போது, குறித்த ஆட்சேர்ப்பு தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதாக கல்வி அமைச்சரினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு உறுதியளிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் அவதானம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்ளுக்கான நியாயத்தை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அதிபர் ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435