அதிபர் சேவை போட்டிப்பரீட்சை மாற்றி வழங்கப்பட்ட வினாத்தாள்

நாடளாவிய ரீதியில் நேற்று (10) இடம்பெற்ற அதிபர் சேவையின் தரம் 3இற்க்கான போட்டிப் பரீட்சையில் நுவரெலியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் தோற்றிய பரீட்சார்திகளுக்கு பரீட்சை வினாத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டதாக இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்த சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சங்கர மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

அதிபர் சேவையின் தரம் 3க்கான போட்டிப் பரீட்சை மூன்று பிரிவுகளாக இடம்பெறும். இதில் முதலாவதாக கிரகித்தல் பரீட்சை வினாத்தாளும், இரண்டாவதாக சம்பவக் கற்கை வினாத்தாளும், மூன்றாவதாக பொது அறிவும் – நுண்ணறிவும் கற்கை வினாத்தாளும் வழங்கப்பட வேண்டும்.

இந்த நிலையில், நுவரெலியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று இடம்பெற்ற குறித்த பரீட்சையில், சுமார் 100 முதல் 150இற்கும் இடைப்பட்ட தமிழ் பரீட்சார்த்திகள் பங்குபற்றியுள்ளனர்.

முதலாவதாக வழங்கப்படவேண்டிய கிரகித்தல் பரீட்சை வினாத்தாளுக்குப் பதிலாக, மூன்றாவதாக வழங்கப்படவேண்டிய பொது அறிவும் – நுண்ணறிவும் பரீட்சை வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சங்கர மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகளை பரீட்சை மண்டபத்திலிருந்து இடைவேளை நேரங்களில்கூட வெளியே செல்ல அனுமதிக்காது, தனிப்பட்ட தேவைகளுக்காக மாத்திரம் பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்களின் கண்காணிப்பில் வெளியே அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக குறித்த பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாகவும், அவர்களினால் பரீட்சையை உரிய முறைமையில் எழுத முடியாத நிலை ஏற்பட்டதாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும் அதனை பரீட்சை ஆணையாளர் நாயகத்திற்கு தாம் முறைப்பாடாக பதிவு செய்துள்ளதாகவும் இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சங்கர மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் கேட்டுக்கொள்வதாக அதன் பொதுச் செயலாளர் சங்கர மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435