புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக மாற்றி வர்த்மானியில் அறிக்கை வௌியிட்டு தமக்கு அச்சத்தை ஏற்படுத்தி தமது தொழிற்சங்க நடவடிக்கையை தடை செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக அரசாங்கம் தயாராகி வருவதாக கூறி புகையிரத கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளின் சங்கத்தின் அழைப்பாளர் லால் ஆரியரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
அச்செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டால் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை தொடர்பில் நேற்று (08) தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அவ்வாறு அரசாங்கம் தீர்மானம் எடுத்தால் கடமைக்கு செல்வதற்கு பதிலாக சர்வதேச தொழிற்சங்கம், ஐரோப்பா சங்கம் மற்றும் ஏனை ய சங்கங்களுக்கு தாம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தீர்மானத்தினூடாக மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் கடந்த அரசாங்கம் இல்லாமலாக்கிக்கொண்டது போலவே இந்த அரசாங்கமும் ஜிஎஸ்பி சலுகைய மீண்டும் ஒரு முறை இல்லாமலாக்கிக்கொள்ளவேண்டியேற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பல வருடங்களாக நிலவிய சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட அமைச்சரவை அனுமதியை கவனத்திற்கொள்ளாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், ரயில் கட்டுப்பாட்டு அதிகாரிகள், ரயில் கண்காணிப்பு முகாமையாளர்கள், ரயில் கட்டுப்பாட்டாளர்கள் கடந்த 7ம் திகதி நள்ளிரவு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
பிரதமர், துறைசார் அமைச்சர் ஆகியோரின் விருப்பத்துடன் அமைச்சரவை பத்திரத்தை முன்வைக்க கடந்த 8ம் திகதி இணக்கப்பட்டு வந்ததாகவும் அதற்கமைய அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டபோதிலும் அமைச்சரவையில் நிலவிய எதிர்ப்பு காரணமாக அது இடை நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வௌியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்