அநீதியிழைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி வேண்டும்!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று பரீட்சை எழுத முடியாமல் போன 41 ஆசிரியர்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதி நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம் பி அலிஸாஹிர் மௌலான பாராளுமன்றில் கோரினார்.

வன்னி மாவட்டத்தில் ஆசிரியர்களாக நியமனம் பெற்ற குறித்த 41 ஆசிரியர்களும் இறுதியுத்தத்தின் காரணமாக பரீட்சையில் தோற்ற முடியாமல் போனது. அவர்களுக்கு கனிஷ்ட ஆசிரியர்களுடன் பரீட்சை எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு ஏற்பட்ட அநீதியை நிவர்த்து செய்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.

கனிஷ்ட ஆசிரியர்களுக்கு பரீட்சை நடத்தப்பட்ட திகதியிலேயே பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் பரீட்சை நடத்தப்பட்டது. ஒரே வினாப்பத்திரம் வழங்கப்பட்டது. எனினும் சான்றிதழ் தினம் மட்டும் வேறு வேறாக வழங்கப்பட்டுள்ளது. இது அவர்களின் அடிப்படை உரிமை மீறல். எனவே இதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆசிரியர் கலாசாலைகளில் ஆசிரியர் பயிலுனர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. பயிற்சியில்லாத ஆசிரியர்களுக்கு இரு வருட பயிற்சி வழங்கப்பட்டு பின் குறிப்பிட்ட பாடசாலைகளில் இணைக்கப்பட்டனர்.

மேற்படி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் இதன் போது பதிலளித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435