அனுமதிப்பத்திரமின்றி பஸ் ஓட்டுவோருக்கு 200. 000 ரூபா அபராதம்

சேவை அனுமதிப்பத்திரம் இன்றி பஸ்களை செலுத்துவோருக்கு எதிராக மாவட்ட நீதிமன்றங்களின் மூலம் தற்போது அறவிடப்படுகின்ற குறைந்த தண்டப்பணத் தொகையை ரூ.10,000 முதல் ரூ. 200,000 வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.

அது தொடர்பில் விதிமுறைகளை தயாரித்து 1991ம் ஆண்டு 37ம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் 40 உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ‘தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தம்) சட்ட மூலத்தை’ அனுமதிக்காக வேண்டி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

முறையான அனுமதி இன்றி பயணிகள் பேரூந்துகளை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக தற்போது காணப்படும் சட்டத்தினை மேலும் வலுவூட்ட வேண்டிய தேவை தற்போது வலுப்பெற்றுள்ள நிலையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435