அரச மற்றும் அரை அரச நிறுவனங்களில் அனுமதிக்கப்பட் டஊழியர்களுக்கு மேலதிகமாக சுமார் 7500 பேர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு சட்டவிரோதமாக சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியல்ரீதியான நட்புறவு காரணமாக கடந்த சில வருடங்களாக முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதியின்றி இவ்வாறு ஊழியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக மாகாணசபை, பிரதேசசபை போன்ற நிறுவனங்களில் இவ்வாறு ஊழியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் இவ்விடயம் தொடர்பில் குறித்த நிறுவனங்களில் இருந்து அறிக்கைகள் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள நிதியமைச்சு, குறித்த அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து அந்நிறுவனங்களுக்கு அவசியமான ஊழியர்களுடைய சேவையை மற்றும் நிரந்தரமாக்க தீர்மானித்துள்ளதாகவும் ஏனையோர் தொடர்பான பொறுப்பை நிறுவனங்களின் பிரதானிகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதற்குப் பிறகு முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதியின்றி அரச அல்லது அரை அரச சேவை நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைத்துக்கொள்வதை முற்றாக தடை செய்து திரைசேரி சுற்றுநிரூபம் ஒன்றை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.