சேவைப் பிரமாணக்குறிப்புக்கு புறம்பாக ஆசிரியர் சேவையில் பதவியுயர்வுகள் இல்லை

சேவைப் பிரமாணக்குறிப்புக்கு புறம்பாக  கல்வித்துறை அரசியில் பழிவாங்கல் நியமனங்கள் வழங்கப்பட மாட்டாது என்ற வாக்குறுதியுடன் உச்ச நீதிமன்றில்  இடம்பெற்ற வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவையில் 4200 பேருக்கு வழங்கப்பட்ட பதவியுயர்வு தொடர்பில் உயர்நீதிமன்றில் தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சந்தர்ப்பத்தில் நீதியரசர் சார்பில் முன்னின்ற மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் இந்திக்கா தேமுனி டி சில்வா இவ்விணக்கத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் பயிற்றுவிப்பாளர் சங்கம் என்பன இணைந்து முன்வைத்த இம்மனுவை பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், பிரியந்த ஜயவர்தன மற்றும் அணில் குணரத்ன ஆகியோர் அடங்கிய சிரேஷ்ட நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

ஆசிரியர் சேவையில் உள்ள 11,000 பேர் பிடகோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது என்றும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளானவர்களுக்கு அனுசரனை வழங்குவதற்காக மேற்கொள்ளும் வகையில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் அதன் பின்னர் முறையற்ற வகையில் பதவியுயர்வுகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அதனை நிறுத்துமாறும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து சேவைப் பிரமாணக்குறிப்புக்கு புறம்பாக பதவியுயர்வுகள் வழங்கப்படமாட்டாது என்ற சட்ட மா அதிபரின் இணக்கப்பாட்டுடன் வழக்கு முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435