அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு!

நாட்டில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பைப் பெற்றுத்தர அரசு இணங்கியுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் அரச வேலைவாய்ப்பை கோரி விண்ணப்பிக்கும் பட்டதாரிகளின் வயது எல்லை  45ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருப்பதாக இந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட குழு இதற்கான அறிக்கையினை சமர்ப்பித்திருப்பதாகவும் பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய அனைத்து மாகாணங்களிலும் காணப்படும் ஆசிரியர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், அமைச்சு மற்றும் திணைக்களங்களுக்கான அதிகாரிகள் ஆகிய பதவிகளுக்கு நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பிரதமர் அலுவலகம் ஊடாகவே நிதி அமைச்சிக்கு இதற்கான பத்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமரால் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவின் தலைவரான தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சின் திட்ட செயலாளர் சாந்த பண்டாரவினால் இந்த தொழில்வாய்ப்பு தொடர்பான விவரங்கள் வேலைவாய்ப்பு பட்டதாரிகள் சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பட்டதாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435