இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் இன்று (17) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை பொதுச்செயலாளராக செயற்பட்ட அனுஷியா சிவராஜாவுக்கு பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் விசேட பேராளர் மாநாடு இன்று (17) காலை கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் பொதுச் செயலாளராக ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.