நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் 06 மாதத்திற்குள் தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய கல்விக்கொள்கை மற்றும் திட்டமிடலின் கீழ் கல்வி முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கடந்த தேர்தலின் காரணமாக பிற்போடப்பட்ட நேர்முகத்தேர்வுகள் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் நடத்தி விரைவில் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நமது நாட்டில் கல்வி முறையில் காணப்படும் சில குறைப்பாடுகள் காரணமாக நாட்டின் வளமான பட்டதாரிகள் போராட்டத்தில் இறங்கவேண்டியுள்ளது என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.