அமைச்சரவை உபகுழு- ரயில்வே ஊழியர் தொழிற்சங்க கூட்டமைப்பு சந்திப்பு

அமைச்சரவை உபகுழுவுக்கும் ரயில்வே ஊழியர் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (01) இடம்பெறவுள்ளது.

ரயில்வே தொழிற்சங்கங்கள் மேற்கொண்டிருந்த வேலைநிறுத்தப்போராட்டம் நேற்று (31) பிற்பகலுடன் நிறைவுக்கு வந்ததையடுத்து இப்பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு எட்டப்படாவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு ​நேற்றைய போராட்டம் கைவிடப்பட்டது. இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் அனைத்து போராட்டங்களும் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே எதிர்வரும் 6ம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தப்போராட்டம் சில தொழிற்சங்கங்களின் அவசர தீர்மானம் காரணமாக 29ம் திகதியே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் அனைத்து தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பும் கிடைக்காமல் போனது. எது எவ்வாறு இருப்பினும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சில தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட 48 மணி நேர வேலைநிறுத்தப்போராட்டம் வெற்றியளித்துள்ளது என்றும் ரயில்வே ஊழியர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435