எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு சனிக்கிழமைகளில் தபாலகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு தாம் இணங்க முடியாது என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக தமது சங்கம் கூடிய ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக அந்த சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமைககளில் தபாலகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதேநேரம், தபால் துறை பணியார்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமைகளில் தபாலகங்களை தற்காலிக மூடுவதற்கும், மேலதிக கொடுப்பனவை வழங்குவதை தவிர்ப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக. ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இது தொடர்பில், தபால் தொழிற்சங்கம், அமைச்சர் பந்துல குணவர்தவுடன் அவர் நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தை இணக்கமின்றி நிறைவடைந்தது.
இந்த நிலையில், அது குறித்து நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் பாரிய நிதி மற்றும் பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில், செலவுகளை மட்டுப்படுத்தாவிட்டால், நாட்டை முன்கொண்டு செல்வதில் சிக்கல் நிலை ஏற்படும் என்பதனால், ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு செய்யுமாறு தபால் துறையினரிடம் கோரப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமைகளில் பணியாற்றுதல், மேலதிக கொடுப்பனவை வழங்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளில் ஏதாவது ஒரு கோரிக்கையை தபால் துறையினர் கைவிட வேண்டும்.
எனவே, சனிக்கிழமைகளில் தபாலகங்களுக்கு விடுமுறை வழங்கி, ஏனைய தினங்களில் மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.