அரசாங்க பாடசாலைகளில் 4400 அதிபர் வெற்றிடங்கள்

இலங்கையிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் 4400 பாடசாலைகளில் அதிபர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டினார்.

கடந்த செவ்வாய்கிழமை ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், இலங்கையல் 10,161 அரசாங்க பாடசாலைகள் உள்ளன. அதில் 9809 பாடசாலைகள் மாகாணசபைகளின் அதிகாரத்தின் கீழ் இயங்குகின்றன. 352 பாடசாலைகள் மத்திய அரசின் கீழ் இயங்குகின்றன. இப்பாடசாலையில் நிரந்தர நியமனமற்ற நிலையில் 3270 பேர் தற்காலிகமாக பதில் அதிபர்களாக பணியாற்றுகின்றனர்.

நாடுபூராவும் உள்ள 4400 பாடசாலைகளில் அதிபர் பற்றாக்குறை நிலவுகிறது. அதாவது பதில் அதிபர்களே பொறுப்பில் உள்ளனர். அதிபர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அதிபர் பரீட்சை நடத்தப்பட்டது. அதற்கு 21000 பேர் விண்ணப்பித்தனர். 19000 பேர் மட்டுமே பரீட்சையில் தோற்றினர். இவர்களில் 3859 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை உரிய இடங்களில் பதவியமர்த்துவதற்கான நடவடிக்கையை பிரதமர் தலையிலான குழு முன்னெடுத்து வருகிறது. இந்நடவடிக்கை இன்னும் இரு வாரங்களில் பூர்த்தியடையும்.

இதனூடாக 3859 வெற்றிடங்களே நிரப்பப்படவுள்ளன. எஞ்சியிருக்கும் 541 வெற்றிடங்களுக்கு தற்போது கடமையில் உள்ள பதில் கடமையாற்றும் அதிபர்களினது செயற்பாடுகளை ஆராய்ந்து சேர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வேலைத்தளம்/ நன்றி – வீரகேசரி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435