அரச உத்தியோகத்தர்களின் ஆடை குறித்து புதிய சுற்றறிக்கை

அரசாங்க அலுவலகங்களின் வளாகங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரச உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பில் அரச நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகள் ஆகியோருக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடமை நேரத்தில் அலுவலகத்திற்கு சமுகமளிக்கும் ஆண் உத்தியோகத்தர்கள்  மேற்சட்டை மற்றும் முழுகாற்சட்டையையோ அல்லது தேசிய ஆடையிலோ பணிக்கு சமுகமளிக்க வேண்டும்.

பெண் உத்தியோகத்தர்கள் சேலை அல்லது கண்டிய சேலை அணிந்து பணிக்கு சமுகமளிக்க வேண்டும் என குறித்த சுற்றறிக்கை ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சீருடை அல்லது சீருடைக்கான கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளும் உத்தியோகத்தர்கள் தங்களது அனுமதிக்கப்பட்ட சீருடையில் சேவைக்கு சமுகமளிக்க வேண்டும்.

இதேநேரம், கர்ப்பிணிப் பெண்கள் தங்களுக்கு இலகுவானதும், பொருத்தமானதுமான ஆடையில் பணிக்கு சமுகமளிக்க வேண்டும்.

மத கலாசாரத்துக்கு அமைய ஆடை அணியும் உத்தியோகத்தர்கள் மேலே குறிப்பிட்டவாறு ஆடையணிந்து, அதன் பின்னர் அந்த சமய அடையாளப்படுத்தை உறுதிப்படுத்தும் விதத்திலும், முகம் முழுமையாக தெரியக்கூடியவாறு ஆடைகளை அணிய வேண்டும் என்றும் குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்திற்கு சொந்தமான காரியாலயங்களுக்கு சேவை பெறுநர்களாக செல்பவர்கள், தங்களை தெளிவாக அடையாளம் கண்டுகொள்ளும் வகையிலான ஆடைகளை அணிந்துசெல்ல வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கை கீழே…..

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435