2020 ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய கொடுப்பனவுகளை நிறுத்தியமையாலேயே பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பிட்டபன பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கல்நதுகொண்டு உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில் உங்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தேன்.
2019 ஆம் ஆண்டு நான் ஆட்சியை மீண்டும் கையளித்தபோது, நாட்டில் அரச ஊழியர்களின் சம்பளம் 107 வீதத்தினால் அதிகரித்திருந்தது.
இன்று என்ன நடக்கிறது? பாரிய பிரச்சினை ஏற்பட்டுளளது. அரசாங்கம் கூறினாலும், கொரோனா காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையவில்லை.
2020 ஆம் ஆண்டில் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய கொடுப்பனவுகளை நிறுத்தியமையினாலேயே பொருளாதார பிரச்சினை ஏற்பட்டதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.