அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு ஆகக்குறைந்து 3,000 ஆகக்கூடியது 24,000

அரச ஊழியர்களின் சம்பளம் ஆகக்குறைந்தது 3,000 ரூபாவினாலும் ஆகக்கூடியது 24,000 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நிதி அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட சிபாரிசிற்கு அமைவாக அரசாங்க ஊழியர்களின் மாதாந்த சம்பளம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தும் வகையில் ஆகக்குறைந்த 3,000 ரூபாவினாலும் ஆகக்கூடிய 24,000 ரூபாவாலும் அதிகரிக்கக்கூடும்.

இந்த அதிகரிப்பு அனைத்து ஊழியர்களினதும் சம்பளம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் 2015 ஆம் ஆண்டு இருந்த ஆரம்ப சம்பளத்திற்கு அமைவாக ஆகக்கூடிய வகையில் 107 சதவீதம் வரையிலான அதிரிப்பு மேலதிகமாக இடம்பெறுகின்றது.

இதற்கு மேலதிகமாக இந்த புதிய சம்பள அதிகரிப்பு காரணமாக அரச பிரிவில் பல்வேறு துறைகளில் நிலவிய சம்பள முரண்பாடுகள் நீக்கப்படும்.

சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக தேவையான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு திரு. எஸ்.ரணுக்கே தலைமையிலான 15 பேரைக்கொண்ட சம்பள மதிப்பீட்டு ஆணைக்குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இதன் பெறுபேறாக அரச துறையில் அனைத்து ஊழியர்களினதும் சம்பளம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மேலும் அதிகரிப்பதுடன் விஷேடமாக ரயில் மற்றும் தபால் சேவைகள் உள்ளிட்ட சம்பள முரண்பாடு அரச துறையில் நிலவுமாயின் அவை முற்றாக நீக்கப்படும்.

ரயில் சேவையில் சம்பள முரண்பாடு நீக்கப்படுவதனால் ரயில் தொழில்நுட்ப சேவைக்கு உட்பட்ட ரயில் செயற்பாடு / கண்காணிப்பு முகாமைத்துவ சேவைக்குட்பட்ட  அதிகாரிகளுக்காக TL என்ற புதிய சம்பள முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு அதன் ஆரம்ப சம்பளம் 36,095 ரூபா என்ற ரீதியில் அமைக்கப்படும். இதற்கு மேலதிகமாக ரயில் எஞ்சின் சாரதி உதவியாளர்களின் சம்பளம் MT 1 சம்பளத்தில் ஆரம்ப சம்பளம் 34,415 ரூபாவாக அமையும்.

இதற்கு அமைவாக ரயில்வே ஊழியர்கள் தமது சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி மேற்கொண்ட தொழிற்சங்க செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டிய தேவை ஏற்படவில்லை. இதற்கு அமைவாக இந்த அதிகரிப்பின் கீழ் 2015 ஆம் ஆண்டில் 11,730 ஆக இருந்த அரச சேவை ஆரம்ப மட்ட ஊழியர்களின் ஆககுறைந்த அடிப்படை சம்பளம் 2020 ஆம் ஆண்டளவில் 24,250 ரூபா வரையில் அதிகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது உரிய சம்பள முரண்பாடு தொடர்பான ஆணைக்குழுவின் சிபாரிசிற்கு அமைவாக சம்பளம் 27,250 ரூபா வரையில் 3,000 ரூபாவினால் மேலும் அதிகரிக்கின்றது. இந்த சம்பள அதிகரிப்பிற்கு அமைவாக சுமார் 11 இலட்சமான அனைத்து அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு அதிகரிக்கின்றது.

மேலும் இந்த புதிய சம்பள அதிகரிப்பு அடிப்டை சம்பளத்துடன் ஒன்றிணைக்கப்படுவதுடன் சம்பளத்திற்கு சமனான தொகை மொத்தமாக இடர் கடன் மற்றும் சொத்துக்கடன்களை பெற்றுக்கொள்வதில் தற்பொழுது பெற்றுக்கொள்ளப்படும் அளவிலும் பார்க்க கூடுதலான தொகையை கடனாக பெற்றுக்கொள்வதற்கு அரச ஊழியர்களிற்கு சலுகை கிடைக்கின்றது.

அடிப்படை சம்பளத்திற்கு அமைவாக மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகள் அதிகரிக்கும். 2015 ஆம் அண்டில் 562 பில்லியனாக இருந்த அரச ஊழியர்களின் சம்பள கொடுப்பனவு தொகை தற்பொழுது 750 பில்லியன் வரை அதிகரிக்கும். ஓய்வூதிய சம்பள செலவு 2015 ஆம் ஆண்டில் 157 பில்லியனாக இருந்தது. தற்பொழுது இந்த தொகை 225 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும்.

அதிகரிக்கப்பட்ட இந்த புதிய சம்பளம் 2020 ஜனவரி மற்றும் 2021 ஜனவரி தொடக்கம் சமமான அளவில் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக 2020 ஆம் ஆண்டில் 120 பில்லியன் ரூபாவும் 2021 ஆம் ஆண்டில் மேலும் 120 பில்லியன் ரூபாவும் செலவிடவேண்டும். கடந்த 4 வருடத்திற்கு மேற்பட்ட காலப்பகுதியில் அரச சேவையில் புதிதாக சுமார் 75,000 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435