ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பமானது.
சுகாதார வைத்திய உத்தியோகத்தர் அலுவலக பணியாளர்கள் நேற்று தபால் மூலம் வாக்களித்தனர்.
சுகாதாரப் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து வாக்களிப்பு இடம்பெற்றதாக மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரச நிறுவனங்களுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றும், நாளையும் இடம்பெறும்.
அனைத்து அரச நிறுவனங்களிலும் சேவையாற்றும் சேவையாளர்கள் இன்றும், நாளையும் தபால்மூலம் வாக்களிக்க முடியும்.
பொலிஸார், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவினர் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் எதிர்வரும் 16, 17 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
அன்றைய தினம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.