அரச ஊழியர்களுக்கு அரச சேவை ஆணைக்குழுவின் அறிவித்தல்

கொவிட்-19 பரவல் காரணமாக பொதுமக்கள் தினம் உள்ளிட்ட ஏனைய அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்துவதற்கு அரச சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

எனவே, பயனாளர்களுக்கு புதிய முறைமையில் சேவையை வழங்குவதற்கு அரச சேவை ஆணைக்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பயனாளர்கள் அரச சேவை ஆணைக் குழுவிற்கு கோரிக்கை ஒன்றை முன்வைக்கும்போது, அவர்கள் தங்களுடைய தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றை குறிப்பிட வேண்டும்.

இதையடுத்து, குறிப்பு இலக்கம் குறுந்தகவல் மூலமாக பயனர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் PSC (இடைவெளி) குறிப்பு இலக்கத்தை பதிவுசெய்து 070 43 64 462 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவலை அனுப்பி வைப்பதன் மூலமாக தங்களின் கோரிக்கை தொடர்பான தற்போதைய நிலைமையை அவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி அரச சேவை ஆணைக்குழுவின் இணைய தளத்திற்கு பிரவேசித்து தற்போதைய நிலவரம் தொடர்பான பிரிவில் குறிப்பு இலக்கத்தை பதிவு செய்வதன் மூலமாக தங்களுடைய கோரிக்கையை தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இதேநேரம் கீழ்க்கண்ட இலக்கு தொலைபேசி இலக்கங்கள் ஊடாக மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

பொது – 0112 366 000

மேலதிக செயலாளர் / செயற்பாட்டு – 0112 13 66 03 –

செயலாளர் 0112 13 66 17

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435