மரியாதைக்குரியவர்களே! முறைசாராதுறை ஊழியர்களுக்கு முறையான பொறிமுறை தேவை

‘தேர்தல் மோகம்’ மற்றும் ’20 நமது நமக்காக நாம்’ என்ற இரண்டு நாடகங்களும் முற்றுபெற்றன. இந்த நாடகத்தின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக கொரோனா மீண்டும் எங்கள் கழுத்தை நெரிக்கும் அளவு நெருங்கியதைக் கூட நாம் அறிந்திருக்கவில்லை. தற்போது நமக்காக நாம் மட்டுமே எஞ்சியுள்ளது. இலங்கையின் தொழிற்படையில் பெரும்பான்மையானவர்கள் முறைசாராதுறை தொழிலாளர்கள். அவர்களில் பெரும்பாலானோர் நாட்கூலிகளாவர். நாட்டில் பரவிவரும் மற்றும் பரவிக்கொண்டிருக்கும் கொவிட்-19 தொற்றுநோய், நாட்டின் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது. தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ளது. அவை பல்வேறு வடிவங்களில் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், நாட்டில் தனியார் மற்றும் அரச துறை ஊழியர்கள் சில சிக்கல் நிலைமைக்கு மத்தியில் தங்கள் அன்றாட வேலைகளை வீட்டிலிருந்து செய்து, மாத சம்பளத்தைப் பெறுகிறார்கள்.

சமூகப்பரவல் இல்லாத விசித்திரமான கொத்தணி மூலம் தொற்று பரவுகின்றது என்பது மரியாதைக்குரிய பெரியவர்களின் கருத்தாகவுள்ளது.

எவ்வாறிருப்பினும், ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் முதலீட்டு வலயங்களில் உள்ள சக தொழிலாளர்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றனர், ஏனெனில், அவர்கள் உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். இதற்கிடையில், வழக்கம் போல் கேட்கப்பட்ட ஒரு உரையாடலை ஊடகங்கள் வெளியிட்டன. அதாவது, “இது மக்களின் தவறு, அவர்கள் கவனமாக இருந்தால், இது நடக்காது.” இருப்பினும், அன்புள்ள சக தொழிலாளர்கள். நாம் எப்போதும் மறக்கும் ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, நீங்கள் டொலர்களைக் கொண்டு வரும்போது நீங்கள் ஒரு ஹீரோ. ஆனால் உங்களை ஒரு துரோகி, ஒரு தொற்றுநோயாளர் என்று அழைக்க எங்களுக்கு உரிமை இல்லை. இது வேறு இடத்தில் இருக்கிறது. நாட்டு வீரர்களை மனித குண்டுகள் என்று பெயரிட்ட நாடு நமக்கு உள்ளது.

அரசியலமைப்பைத் திருத்துவதில் இருந்த அரசாங்கத்தின் தீவிர அக்கறை அதை ஆட்சிக்கு கொண்டுவந்த தொழிலாளர்கள் மீது செலுத்தப்பட வேண்டும். நாட்டில் வேகமாக பரவி வரும் தொற்றுநோய் மற்றும் அடுத்தடுத்த ஊரடங்கு உத்தரவு காரணமாக முறைசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களில் வீட்டுத் தொழிலாளர்கள், விற்பனை உதவியாளர்கள், நடைபாதை விற்பனையாளர்கள், பளு தூக்குபவர்கள் (நாட்டாமை), நிரந்தர அடிப்படையில் வேலை செய்யாத ஆடைத் தொழிலாளர்கள், லொத்தர் விற்பனையாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், மீனவர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்கள் போன்றவர்கள் உள்ளனர். அவர்கள் இந்த தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலை இழப்புடன், அவர்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர், அவர்களில் பலர் நாள் கூலிகள் மற்றும் மறு வேலைவாய்ப்புக்கான வாய்ப்பு எதிர்காலத்தில் நிச்சயமற்றது. இந்த தொழிலாளர்கள் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கொழும்பு மற்றும் கம்பஹா உள்ளிட்ட பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை விதித்த பின்னர் இதே நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, பின்னர் அதை முழு மேல்மாகாணத்திலும் அமுலாக்க அரசாங்கம் முடிவு செய்தது. ஒருவர் வாழ்வாதாரத்தை இழப்பது அத்தியாவசிய உணவு, மருந்து மற்றும் சுகாதாரப் பொருட்கள் உட்பட அனைத்து தேவைகளையும் இழந்து, சாதாரண வாழ்க்கை இயல்பு நிலைக்கு வருவதற்கு முன்பு இதுபோன்ற நிலை மீண்டும் நிகழ்கிறது என்பது ஒரு சோகமாகும்.

இராஜகிரிய, பொரளை, தெமட்டகொடை, ஒருகொடவத்தை, கொலன்னாவ, மட்டக்குளி, முகத்துவாரம், ப்ளூமெண்டல், கிராண்ட்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய இடங்களில், ப்ரொடெக்ட் சங்கத்தின் சகோதரிகள் கருத்து தெரிவிக்கையில், தங்களில் பலரை மறு அறிவிப்பு வரும் வரை பணிக்குத் திரும்ப வேண்டாம் என்று தங்கள் முதலாளிகளால் கூறப்பட்டதாகக் கூறினர். மாகாணத்திற்கு வெளியில் இருந்து வந்து கொழும்பு பகுதியில் தங்கியுள்ள வீட்டுத் தொழிலாளர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் திரும்பி வருபவர்களாக இருப்பதால், அவர்கள் பெரும்பாலும் தங்கள் சம்பளத்தைப் பற்றிய முறையிடுகின்றனர். மேலும் தொற்றுநோய் காரணமாக வீட்டிற்குச் செல்ல முயற்சிக்கும்போது அவர்களின் சம்பளத்தின் ஒரு பகுதியை மட்டுமே அவர்கள் பெறுகிறார்கள் என்ற முறைப்பாடும் உள்ளது. வீடு திரும்பும் தொழிலாளர்கள் பெறும் அற்ப ஊதியங்கள், நீண்ட காலமாக அறியப்படாத வாழ்க்கையை வாழ அவர்கள் பெறும் கடைசி ஊதியமாக இருக்கலாம். கடந்த கொரோனா தொற்றுநோயின் போது வேலை இழந்த வீட்டுத் தொழிலாளர்களில் சுமார் 50% பேருக்கு இரண்டாவது அலை வந்தபோதும் வேலை கிடைக்கவில்லை.

கொழும்பு முடக்கப்பட்டதனால் நாட்டாமை பணிபுரியும் ஒரு தொழிலாளி, தனது அன்றாட வருமானம் இல்லாமல்போனதாக கூறினார். தொற்றுநோய்களின் போது கூட வேலை இழந்த முறைசாரா தொழிலாளர்களுக்கு அரசாங்கம் எந்தவொரு திட்டவட்டமான ஏற்பாடுகளையும் செய்யவில்லை என்று தொழிலாளர்கள் கவலை வௌியிட்டுள்ளனர். தாங்கமுடியாத கடனில் தாங்கள் சோர்வடைந்துள்ளதாகவும், இந்த தொடர்ச்சியான சூழ்நிலையில் தங்கள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். “மூன்று மாதங்கள் சாப்பிடுவதற்கு 5,000 ரூபா போதுமானால், நாம் இப்படி வெயிலில் போராட வேண்டுமா?” என ஒருவர் கேட்க, மற்றொருவர், ஒரு மாதத்திற்கு 2500 ரூபாவில் வாழ முடியும் என்று கூறிய அமைச்சரைச் சந்திப்பதன் மூலம் இந்த கேள்விக்கான பதிலைக் காணலாம் என்று கூறினார்.

ஹட்டன் பகுதியில் முறைசாரா துறை தொழிலாளர்களின் நிலைமை இதற்கு இரண்டாம் நிலையில் உள்ளது. முந்தைய தொற்று பரவலினால் ஏற்பட்ட சிக்கல்களால் மீண்டும் தீர்க்க முடியாத பிரச்சினைகளில் மலையே இடிந்து விழுந்ததாக ஹட்டன் கிளையின் உறுப்பினர்கள் கூறுகின்றனர். முந்தைய அரசாங்கம் வழங்கிய மானியம் முறையாக பெறப்படவில்லை என்று கூறிய ஒரு லொத்தர் தொழிலாளி, இந்த முறை தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என்று கூறினார்.

ஒரு நாளைக்கு ரூ .300 முதல் ரூ .500 வரை சம்பாதித்த ஒரு வீட்டுப் பணிப்பெண், இப்போது எதுவும் செய்ய இயலாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். முந்தைய தொற்று பரவலின்போது வாழ்வதற்காக பெற்ற கடன்கள் இன்னும் திருப்பிச் செலுத்தப்படவில்லை, மீண்டும் கடன் பெறுவதற்கு வேறு எவரும் இல்லை. குழந்தைகள் பசியுடன் இருக்கும்போது, தாங்கமுடியாத வேதனையை அனுபவிப்பதாக கூறிய அவர், தங்களுக்கு அரசாங்கம நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கூறினார்.

கொழும்பை சூழவுள்ள பகுதிகளில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மீது அனைவரின் கவனமும் திரும்புகின்றது. அவர்கள் கடுமையான பொருளாதார மற்றும் சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது உண்மையாகும். எனினும், ஒரு தெளிவான வேலைத்திட்டத்தின் மூலம் இது தொடர்பாக அரசாங்கம் செயல்படுவதை அவதானிக்க முடியவில்லை. ஆனால் நாங்கள் அடிக்கடி சந்திக்கும் ஆனால் பிரச்சினைகளை வெளிப்படுத்தாத ஒரு உழைக்கும் சமூகமும் உள்ளது. அவர்கள் முறைசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள். அவர்கள் இந்த நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தின் பெரும்பான்மையானவர்கள். இந்த பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் தொழிலாளர்களும் அவர்களே. ஆனால் அவர்கள் யாருடைய கவனத்திற்கும் உள்ளாகமை கவலைக்குரியதாகும்.

தேர்தல் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் இருந்த அரசாங்கத்தின் ஆர்வம், தங்களை ஆட்சிக்கு கொண்டுவந்த ஏழை மக்கள் மீது செலுத்தப்பட வேண்டும், மேலும் தொற்றுநோய் மோசமடைவதற்கு முன்னர் முறைசாரா தொழிலாளர்களுக்கு பொருத்தமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். இது மானியங்கள் போன்ற இடைக்கால தீர்வுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு திட்டமாக இருக்க வேண்டும். அத்தகைய திட்டத்தை ஏற்படுத்த எங்களால் ஒத்துழைப்பு வழங்க முடியும். அத்தகைய திட்டத்தின்கீழ் அரசாங்கம் மானியம் வழங்க அவசியமில்லை.

மரியாதைக்குரியவர்களே! உங்கள் நாடக திறமையால் மெய்சிலிர்த்த பார்வையாளர்களாகிய மக்கள் தற்போது வலியை உணர்கிறார்கள். அவர்கள் உங்கள்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாதுகாக்க இனியும் தாமதிக்க வேண்டாம்.

கல்ப மதுரங்க
ப்ரொடெக்ட் அமைப்பு
புகைப்படம் – விதுமின இஹலகெதர

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435