அரச சேவையில் இணையும் போது இரு மொழிப்புலமை கவனத்திற்கொள்ளப்படும் என்று பொது நிர்வாக மற்றும் உள்விவகார இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 28ம் திகதி அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் பெரும்பாலான அரச ஊழியர்களுக்கு இரு மொழி புலமை மிகவும் குறைவாகவேயுள்ளது. அரச துறையில் இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதுடன் பெரும் பிரச்சினைகளையும் தோற்றுவித்துள்ளது. தற்போது அரச துறையில் உள்ள ஊழியர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் ஓரளவுக்கேனும் பணியாற்றக்கூடியவர்களாக இருக்க வேண்டும். இது பயனாளர்கள் அவர்களின் சேவையைப் பெற இலகுவானதாக இருக்கும்.
அரச ஊழியர்களுக்கு மொழி வளத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ளபோதிலும் அவற்றை தரமுயர்த்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.