அரச ஊழியர்களை மறந்த 2018 பாதீடு

எதிர்வரும் 2018ம்ஆண்டுக்காக வாசிக்கப்பட்டுள்ள பாதீட்டில் அரச ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று அகில இலங்கை பொது முகாமைத்துவ சேவைகள் சங்கத்தின் தலைவர் உதேனி திஸாநாயக்க எமது இணையதளத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

பாதீட்டுக்கு முன்னர் நிதியமைச்சரை சந்தித்து நாம் பல்வேறு முன்மொழிவுகளை முன்வைத்தோம். இவ்வாண்டு ஐந்து தடவைகள் பத்தாயிரம் ரூபா அளவில் சம்பளத்தை அதிகரித்த போதும் தற்போதைய சூழ்நிலையில் அரச ஊழியர்கள் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாதவர்களாகவே உள்ளனர்.

தேங்காயின் விலை 100.00, அரசி 100.00, தற்போது வழங்கப்படும் 7800 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை பத்தாயிரம் ரூபாவாக அதிகரிக்க நாம் நிதியமைச்சரிடம் கோரினோம். ஒருபுறம் சொகுசு வாகனங்களின் வரி அதிகரிக்கப்படுகிறது. இதனூடாக எம்பிக்களே நன்மை பெறுவர். அதிக விலைக்கு வாகன அனுமதி பத்திரத்தை விற்க முடியும்.

அரச ஊழியர்களுக்கு சுங்க வரியின்றி மோட்டார் சைக்களொன்றையாவது பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என நாம் நிதியமைச்சரை சந்தித்தபோது தெரிவித்தோம். எனினும் இம்முறை வரவுசெலவில் அந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. தொழிலாளர்கள், உழைக்கும் மக்களை பாதிக்கும் சட்டமூலங்கள் மூன்றை திருத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.

இதனூடாக தொழில் வழங்குநர்களே நன்மை பெறுவர். வௌிநாட்டவர்களுக்கு இலங்கையில் வீடுகளை எடுப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் பாதீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனூடாக குறைந்த வருமானம் உள்ள அரச ஊழியர் ஒருவர் குறைந்த வாடகைக்கு வீடொன்றை பெற்றுக்கொள்ள முடியாது போகும். போட்டித்தன்மையுடன் பார்க்கும் போது அதிக பணம் கொடுக்கும் வௌிநாட்டவருக்கே வீடு வாடகைக்கு விடப்படும்.

எப்போதுமே கண்டில்லாத வரவு செலவு என்று சிலர் இப்பாதீட்டுக்கு சார்பாக கருத்து தெரிவிக்கின்றனர். மக்கள் உணரும் வகையில் எதுவும் இல்லாத காரணத்தினால் இதற்கு முன் கண்டிராத வரவு செலவு திட்டம் என்று கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435